மராட்டிய மாநிலம்: காங்கிரஸ் தலைவர் நசீம் கான் விபத்தில் காயம்


மராட்டிய மாநிலம்: காங்கிரஸ் தலைவர் நசீம் கான் விபத்தில் காயம்
x

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கார் விபத்தில் காயமடைந்தார்.

மும்பை,

ஐதராபாத்தில் இருந்து மராட்டிய மாநிலம் நாந்தேடுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் நசீம் கான் கார் விபத்தில் காயமடைந்தார்.

மராட்டிய முன்னாள் அமைச்சரான நசீம் கான், நவம்பர் 7ஆம் தேதி மாநிலத்திற்குள் நுழையவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொள்வதற்காக நாந்தேட் செல்கிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. நசீம் கான் ராகுல் காந்தியின் நான்தேடு பகுதியின் பொறுப்பாளராக உள்ளார்.

நாந்தேட்டில் உள்ள பிலோலி சுங்கச்சாவடியில் நசீம் கான் பயணித்த கார் மீது வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நசீம் கான், ""எனது வலது காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் பொறுப்பாளராக எனது பொறுப்பை நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் கூறினார்.


Next Story