"நாளை தேசிய கீதம் பாட வேண்டும்" - பொதுமக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள்


நாளை தேசிய கீதம் பாட வேண்டும் -  பொதுமக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள்
x

நாளை தேசிய கீதம் பாட வேண்டும் என்று மாநில மக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை,

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாளை காலை 11 மணிக்கு மராட்டிய மாநில மக்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் காலை 11 மணி முதல் 11.01 மணிக்குள் தேசிய கீதத்தை பாடி முடிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் அனைத்துத் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. இது மத்திய அரசின் சுவராஜ் மஹோத்சவின் ஒரு பகுதியாகும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story