நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - மராட்டிய மந்திரி கோரிக்கை
நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்க கோரி மராட்டிய மந்திரி சுதிர், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மும்பை,
நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்க கோரி மராட்டிய மந்திரி சுதிர் முங்கந்திவார், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மராட்டிய மாநிலத்தின் உள்ள நாக்பூர், கோண்டியா, பண்டாரா மற்றும் சந்திராபூர் ஆகிய மாவட்டங்களும், ஐதராபாத்திற்கும் இடையே நல்ல வணிகம் நடைபெறுகிறது. நாக்பூர்-ஐதராபாத் வழித்தடத்தில் தற்போது 22 ரயில்கள் இயக்கப்பட்டாலும், இந்த 575 கி.மீ தூரத்தை கடக்க விரைவு ரெயில் இருக்க வேண்டும்.
இந்த பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை அரசு தொடங்கினால் விதர்பாவில் உள்ள 4 மாவட்டங்கள்(நாக்பூர், கோண்டியா, பண்டாரா மற்றும் சந்திராபூர்) பயன்பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.