மராட்டிய சபை நாளை விரிவாக்கம்: 12 பேர் பதவியேற்க இருப்பதாக தகவல்
மராட்டிய மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்று திரும்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாளை நடக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 12 பேர் பதவியேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜனதா சார்பில் சுதீர் முங்கண்டிவார், சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.இதேபோல் முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிவசேனா சார்பில், குலாப் ரகுநாத் பாட்டீல், சதா சர்வான்கர், தீபக் வசந்த் கேசர்கர் ஆகியோர் நாளை பதவியேற்க உள்ளனர்.
Related Tags :
Next Story