மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறை உருவாக்கப்படும்: மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு!
மராட்டிய மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறையை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநில அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய துறையை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநிலத்தில் தனி துறை அமைக்கப்படும் என்றார்.
அனைத்து கருத்துக்களையும் கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கைகளை அரசு உருவாக்கும் புதிய துறைக்காக, தனது அரசு 2,063 பணியிடங்களை உருவாக்கியுள்ளது. இதற்காக ரூ.1,143 கோடி ஒதுக்கப்படும்.
நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகள் துறையை அமைத்த முதல் மாநிலம் மராட்டியம் தான் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story