குஜராத்தி- ராஜஸ்தானி கருத்து: மராட்டிய கவர்னர் மன்னிப்பு கோரினார்
மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது என கவர்னர் கோஷ்யாரி பேசியிருந்தார்.
மும்பை,
மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி குஜராத்திகளும், ராஜஸ்தானியர்களும் இல்லையென்றால் மாநிலத்தில் பணமே இருக்காது, மும்பை நிதி தலைநகராக இருக்காது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரின் இந்த பேச்சுக்கு மராட்டியத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்மேலும் கவர்னர் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். மராட்டியத்தின் மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரும், கவர்னரின் கருத்தை கடுமையாக சாடியிருந்தார்.
இந்த நிலையில், மராட்டிய கவர்னர் அலுவலகத்தில் இன்று மாலை அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், மராட்டியம் குறித்த தனது சமீபத்திய கருத்தை மாநில மக்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவார்கள் என நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உள்நோக்கம் அற்ற தவறை தான் செய்து விட்டதாகவும் கவர்னர் கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.