மராட்டிய கவர்னருக்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டம்


மராட்டிய கவர்னருக்கு எதிராக சிவசேனா கட்சியினர் போராட்டம்
x

மராட்டியத்தில் குஜராத்தி, ராஜஸ்தானியர்களை நீக்கிவிட்டால் பணமே இருக்காது என கவர்னர் பேசியிருந்தார்.

மும்பை,

மராட்டிய கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், மராட்டியத்தில் உள்ள குஜராத்தி, ராஜஸ்தானியர்களை நீக்கிவிட்டால் மாநிலத்தில் பணமே இருக்காது என பேசினார். கவர்னரின் இந்த சர்ச்சை பேச்சு மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரின் பேச்சுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கு மத்தியில் கோலாபூரில் சிவசேனா கட்சியினர் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story