ரூ.3½ லட்சம் மக்காச்சோளம் திருட்டு
தோட்டத்தில் அறுவடை செய்து வைத்திருந்த ரூ.3½ லட்சம் மக்காச்சோளத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
உப்பள்ளி:-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் உனகல் பகுதியை சேர்ந்தவர் சென்னபசவன கவுடா. அலியாலா கிராமத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள கதிர்களை தட்டையுடன் அறுவடை செய்து வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மக்காச்சோளங்களை திருடி சென்றுவிட்டனர். நேற்று காலை சென்னபசவனகவுடா தோட்டத்திற்கு சென்றபோது சோளக்கதிர்கள் திருடியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் ரூ.3½ லட்சம் மதிப்பிலான மக்காச்சோளத்தை திருடி சென்றிருப்பதாக கூறினார். இதுகுறித்து சென்னபசவனகவுடா கொடுத்த புகாரின் ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.