மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு

மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் அதிரடி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனு மீதான தீர்ப்பை கடந்த மாதம் 22-ந்தேதி ஒத்திவைத்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டமும் தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம்  பணி நீக்கம் செய்யபப்ட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரும் மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com