டெல்லி வந்தார் மம்தா பானர்ஜி; பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி வந்தார். தனது இந்த டெல்லி பயணத்தின் போது மிக முக்கியமாக பிரதமர்மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க வற்புறுத்துவார் என்று தெரிகிறது.
இதைத்தொடர்ந்து திரிணாமுல் கட்சி எம்பிக்களையும் சந்தித்து பேசும் மம்தா பானர்ஜி, 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் என்னென்னெ வியூகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுகிறார். இதேபோல் ஆகஸ்டு 7-ந்தேதி நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
Related Tags :
Next Story