உ.பி: பாகிஸ்தானின் தேசிய கொடியை தனது வீட்டில் ஏற்றிய நபர் கைது


உ.பி: பாகிஸ்தானின் தேசிய கொடியை தனது வீட்டில் ஏற்றிய நபர் கைது
x

உத்தரபிரதேச மாநிலத்தில் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதாக இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டில் ஏற்றி இருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றினர். மேலும், கொடியை ஏற்றிய சல்மான் மற்றும் கொடியை உருவாக்கிய அவரது அத்தை ஷானாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சல்மானை கைது செய்தனர்.

1 More update

Next Story