நண்பர்களிடம் கெத்து காட்ட தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துவந்த நபர் கைது


நண்பர்களிடம் கெத்து காட்ட தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துவந்த நபர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2022 11:56 PM IST (Updated: 20 Dec 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லியில் தனது நண்பர்களிடம் கெத்து காட்ட, தன் தந்தையின் துப்பாக்கியை விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்துவந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் ரூப் நகர் பகுதியில் 22 வயது இளைஞன் தனது தந்தையின் துப்பாக்கியை விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்துவந்ததற்காக கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் மவுஜ்பூரைச் சேர்ந்த ஹர்ஷ் என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அவர் தனது தந்தையின் கைத்துப்பாக்கியைத் திருடி, தனது நண்பர்களைக் கவர அதை வைத்து விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், சக்தி நகர் சவுக் சிவப்பு விளக்கில் சிலர் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் போலீசார், அங்கு சென்று விசாரித்தனர்.

போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்த அந்த நபரை போலீசார் பிடித்து, அவரிடம் இருந்த தோட்டாக்களுடன் கூடிய நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அந்த நபரை கைதுசெய்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story