அவதார்-2 படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி


அவதார்-2 படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி
x

ஆந்திராவில் அவதார் 2 திரைப்படம் பார்த்து கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காக்கிநாடா,

ஆந்திர மாநிலம், காக்கி நாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிரெட்டி ஸ்ரீனு. இவர் தனது தம்பியுடன் திரையரங்கிற்கு சென்று நேற்று வெளியான அவதார்-2 படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். படம் பார்த்து கொண்டிருக்கும் போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து, அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லட்சுமிரெட்டி ஸ்ரீனுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த லட்சுமிரெட்டி ஸ்ரீனுவுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் அவதார் முதல் பாகம் வெளியான போதும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தைவான் நாட்டில் அவதார் படம் பாரத்துக்கொண்டிருந்த 42 வயது நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


Next Story