பெண்ணை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்.. காதலனை கைது செய்தது போலீஸ்


பெண்ணை கொன்று சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்.. காதலனை கைது செய்தது போலீஸ்
x

கொலை செய்யப்பட்ட பெண் மத்திய மும்பையில் உள்ள தாராவியைச் சேர்ந்தவர்.

மும்பை:

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண்ணை யாரோ கொலை செய்து சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்த பதிவின் அடிப்படையில் வாலிபர் ஒருவர் மேல் சந்தேகம் வந்ததன் பேரில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபரை விசாரித்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் மத்திய மும்பையில் உள்ள தாராவியைச் சேர்ந்தவர். அவருடைய வயது 25 என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.

1 More update

Next Story