முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு - பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு


முதலை தாக்கி ஒருவர் உயிரிழப்பு - பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு
x

கோப்புப்படம்

குஜராத்தில் முதலை தாக்கி உயிரிழந்த நபரின் உடல் பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது.

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள ஆற்றில் முதலை தாக்கி உயிரிழந்த 30 வயது நபரின் உடல் பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது. பத்ரா தாலுகாவின் சோக்தரகு கிராமத்திற்கு அருகிலுள்ள தாதர் ஆற்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று மதியம் ஆற்றில் நின்று கொண்டிருந்த 30 வயது நபர் ஒருவரை முதலை ஒன்று ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. முதலையின் பிடியிலிருந்து அந்த நபர் தப்பிக்க போராடியும் முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல் மறைந்தது. இதையடுத்து உள்ளூர் நிர்வாகத்தின் உதவியுடன் வன அதிகாரிகள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் இரவு 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த நபர் சோக்தரகு கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் திவான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது தோளில் முதலை கடித்த அடையாளங்கள் இருந்தன.


Next Story