ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்


ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்
x
தினத்தந்தி 15 Dec 2022 2:59 AM IST (Updated: 15 Dec 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. தொடக்க பள்ளி (1 முதல் 5-ம் வகுப்பு வரை) மற்றும் உயர் தொடக்க பள்ளி (6 முதல் 8-ம் வகுப்பு வரை) ஆசிரியர்களை நியமிப்பதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 856 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இதில் 61 ஆயிரத்து 927 பேர் ஆசிரியர் ஆவதற்கு தகுதி பெற்றனர். தகுதி பெற்ற ஆசிரியரிகள் தங்களின் மதிப்பெண் பட்டியலை வருகிற 26-ந் தேதி முதல் https://schooleducation.kar.nic.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 55 மதிப்பெண்களும், பொது பிரிவினர் 60 மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் ஆசிரியர் தகுதி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்.

இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story