சத்தீஸ்கரில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


சத்தீஸ்கரில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

சத்தீஸ்கரில் எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிலாஸ்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சிர்கிட்டி தொழில்துறை பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆறு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையின் கொதிகலன் அருகே தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்து தொடர்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story