மும்பையில் தட்டம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்...!


மும்பையில் தட்டம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்...!
x

மும்பையில் நேற்று புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தட்டம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக குடிசை பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று மும்பையில் புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தட்டமைக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "தட்டம்மை நோய் தொற்றை கட்டுப்படுத்த 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 833 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story