மெட்ரோ ரெயில்களுக்காக சுரங்க பணிமனை அமைக்க திட்டம்
மெட்ரோ ரெயில்களுக்காக சுரங்க பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 5 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு பணிமனை அவசியமான ஒன்றாகும்.
இந்த நிலையில் பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுரங்க பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூருவில் கூடுதலாக 16 இடங்களிலும் இதுபோன்ற பணிமனைகளை அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக பழைய மெட்ராஸ் சாலையில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 16 அடுக்கு பணிமனையை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story