மங்களூருவில் இன்று போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை


மங்களூருவில் இன்று போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை
x

மங்களூருவில் இன்று போலீஸ் அதிகாரிகளுடன் மந்திரி அரக ஞானேந்திரா ஆலோசனை நடத்தி வருகிறார்.

பெங்களூரு:

மங்களூரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து மங்களூருவில் மாநகர போலீசார், மாநில போலீசார், புலனாய்வு பிரிவினர், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள ஷாரிக் குணமானதும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா இன்று (புதன்கிழமை) மங்களூருவுக்கு செல்கிறார்.

அவர் குண்டுவெடிப்பில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்மை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிகிறார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். அத்துடன் குண்டு வெடிப்பு நடந்த இடம், ஆட்டோ ஆகியவற்றை பார்வையிடுகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மங்களூருவில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் ஆகியோரிடம் தகவல்களை கேட்டு பெறுகிறார். மேலும் இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.


Next Story