மைனர் பெண் மர்மசாவு

ஹாசனில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மைனர் பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
மைனர் பெண் மர்மசாவு
Published on

ஹாசன்:

திருமணம் நிச்சயம்

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு தாலுகா கொனனூர் ஹோப்ளி கொட்லூர் கிராமத்தைச் சேர்ந்டஹ்வர் தினேஷ். இவர் சொந்தமாக செருப்பு விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையத்து தினேஷ், அந்த மைனர் பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம்(நவம்பர்) 28-ந் தேதி தினேஷ், அந்த மைனர் பெண்ணை ஒரு கோவில் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் திடீரென அவர் மைனர் பெண்ணின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

விஷம் குடித்து...

அப்போது அந்த மைனர் பெண் விஷம் குடித்து விட்டதாக கூறினார். சிறிது நேரத்தில் அவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மைனர் பெண்ணின் பெற்றோர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது அந்த மைனர் பெண் இறந்துவிட்டது தெரியவந்தது. தினேசுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த மைனர் பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ், அந்த மைனர் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி மைனர் பெண்ணின் பெற்றோர் அரக்கல்கோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து

வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com