ஏரியை காணவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்


ஏரியை காணவில்லை எனக்கூறி  விவசாயிகள் போராட்டம்
x

ஏரியை காணவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சிக்பள்ளாப்பூர்: கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பெல்லாலம்பள்ளி கிராமத்தில் நேற்று விவசாயிகள் ஒரு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்கள் கிராமத்தையொட்டி இருந்த ஏரியை காணவில்லை என்றும், அதை போலீசார் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரி போராட்டம் நடத்தினர்.

இந்த கிராமத்தில் ஒரு ஏரி இருந்துள்ளது. அந்த ஏரியை அதே கிராமத்தைச் சேர்ந்த பாபுரெட்டி, ரெட்டப்பா, வெங்கடராமரெட்டி, சவுடா ரெட்டி மற்றும் சிலர் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆக்கிரமித்து கொண்டதாகவும், அங்கு விவசாயம் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், ஏரியை மீட்டு தருமாறும் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story