சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
உப்பள்ளியில், சாலையோரம் நின்ற சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா காளிதாசர் நகரில் வசித்து வந்தவர் அனுமந்தப்பா சோமப்பனவர்(வயது 40). தொழிலாளியான இவர், தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
செரேவாடா கிராமம் அருகே சென்றபோது அனுமந்தப்பாவின் மோட்டார் சைக்கிள், சாலையோரம் நின்ற சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அனுமந்தப்பா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், டிரைவர் ஆலப்பா சரக்கு வாகனத்தின் ஒளிவிளக்கை அணைத்து நிறுத்தி இருந்தது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
Related Tags :
Next Story