பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்...! - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு


பிளஸ் 2 பொதுத்தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்...! - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
x

பிளஸ் 2 அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , பிளஸ் 2 மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உள்ளவர்கள், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்க உள்ளவர்கள், பொறியியல் படிப்பு படிக்க உள்ளவர்கள், சட்டக்கல்லூரியில் படிக்க உள்ள மாணவர்கள் ஆகிய படிப்புகளுக்கு கட்டணத்தை இனி அரசே செலுத்தும் என மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய பிரதேச அரசு பிளஸ் 2 தேர்வுகளில் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, 110 கிராமங்களில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் முதல்-மந்திரி அறிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மாநில அரசும 10 லட்சம் புதிய அரசுப் பணிகளையும் தொடங்கியுள்ளது மற்றும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story