மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் லாபத்துடன் தொடக்கம்


மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் லாபத்துடன் தொடக்கம்
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 505.39 புள்ளிகள் உயர்வடைந்து 56,321.71 புள்ளிகளாக இன்று உள்ளது.



மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 505.39 புள்ளிகள் உயர்வடைந்து 56,321.71 புள்ளிகளாக உள்ளது. இதன்படி, பஜாஜ் பைனான்ஸ் 567.80 புள்ளிகளும், பஜாஜ் பின்செர்வ் 971.50 புள்ளிகளும் உயர்ந்து இருந்தன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 134.85 புள்ளிகள் உயர்ந்து 16,776.65 புள்ளிகளாக உள்ளது. நிப்டியில் டாடா ஸ்டீல் (1.81 புள்ளிகள்), எஸ் வங்கி லிமிடெட் (0.20 புள்ளிகள்) உயர்ந்து காணப்பட்டது. செயில் அமைப்பு, டாடா மோட்டார்ஸ் நஷ்டத்தில் காணப்பட்டன.

எனினும், வங்கி துறை லாபத்துடன் காணப்பட்டது. பஞ்சாப் நேசனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை லாபத்துடன் தொடங்கி இருந்தன. ஆசிய அளவில் பங்கு சந்தைகள் இன்று லாபத்துடன் காணப்பட்டன.


Next Story