ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மும்பை சுங்கத்துறை நடவடிக்கை


ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் அழிப்பு - மும்பை சுங்கத்துறை நடவடிக்கை
x

மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அழித்தனர்.

மும்பை,

ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் முன்னிலையில் மும்பை சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை அழித்தனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "டிஆர்ஐ, மும்பை மண்டலப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட ரூ.1500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்களை அழிக்கும் பணிகள் மே 26 அன்று மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 9.035 கிலோ கோகைன், 16.633 கிலோ ஹெராயின், 198.1 கிலோ மெத்தம்பேட்டமைன், 2118 கிராம் கஞ்சா, மாண்ட்ராக்ஸ் மாத்திரை ஆகியவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story