ஏசி ரெயில் பெட்டி படியில் நின்று கொண்டு இறங்க மறுத்த பெண் - வைரல் வீடியோ


ஏசி ரெயில் பெட்டி படியில் நின்று கொண்டு இறங்க மறுத்த பெண் - வைரல் வீடியோ
x
தினத்தந்தி 2 Dec 2022 3:28 PM IST (Updated: 27 Jan 2023 1:06 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஏசி ரெயில் பெண் பயணியின் வீடியோ வைரலாகி உள்ளது.

மும்பை:

குழந்தைகளின் பிடிவாதமும், பெண்களின் பிடிவாதமும் முடியாது என்று கூறப்படுகிறது. இதற்கு ஒரு உண்மையான உதாரணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை உள்ளூர் மின்சார ரெயில் மற்றும் அதன் கூட்டத்தைப் பற்றிய கதைகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ரெயில் பெட்டியில் ஆள் நடமாட்டம் இல்லாவிட்டாலும் படியில் தொற்றி கொண்டு செல்லும் பழக்கம் உள்ளது.

இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் முன்னணியில் இருக்கிறார்கள். பின்னர் இந்த பயணிகள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

நவம்பர் 22 அன்று போரிவலி ரெயில் நிலையத்தில் காலை 8.30 மணியளவில் சர்ச்கேட் செல்லும் ஏசி ரெயிலின் நெரிசல் நிரம்பிய பெட்டிக்குள் பெண் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

அது குறித்த வீடியோவில் உள்ள பெண் லோக்கல் ரெயில் ஏசி பெட்டியில் ஏறித்தான் தான் வீட்டிற்கு செல்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். கூட்டம் காரண்மாக அது நிறைவேறாது என்பதற்கான அறிகுறிகளை பார்த்தவுடனேயே இந்த பெண்ணுக்கு கடும் கோபம் வந்தது.

நான் இந்த ரெயிலில் போனால் ரெயில் போகாது என வாசலில் நின்று சண்டை போட்டுள்ளார். இதனால் கதவு அடைக்கமுடியவில்லை. பெண்ணின் இந்த பிடிவாதத்தால் ரெயில்வே போலீசார் அங்கு தலையிட நேரிட்டது. அந்த பெண் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், போலீஸ் சொன்னதைக் கூட கேட்கவில்லை.

ரெயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவுகள் மூடப்பட்டு ரெயில் புறப்பட வேண்டும் என்று அந்தப் பெண்ணை இறங்குமாறு கேட்டுக் கொண்டனர்.. இருப்பினும், அவள் பிடிவாதமாக இறங்க மறுத்தார்.

கடைசியாக லோகோ பைலட் தானே கேபினில் இருந்து கீழே வந்தார்.

அம்மா தாயே சண்டை போடாதே நீ இப்படி நின்றால் வண்டி போகாது என கூறி தனது பைலட் கேபினில் ஏற்றிக்கொண்டார். ரெயில் பைலட்டின் கேபினில் அவர் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றாலும், அந்த நேரத்தில் ரெயில்களின் நேரத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது, நெரிசல் நேரத்தைக் கருத்தில் கொண்டு, இது போன்றவற்றைத் தவிர்க்க பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

இருப்பினும், ரெயில்வேயின் அசாதாரண செயல் நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.



Next Story