26/11 போன்று மும்பையில் தாக்குதலா? பாகிஸ்தான் தொலைபேசி எண்ணில் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தியால் பரபரப்பு

மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப்பிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து பயங்கரவாத தாக்குதல் குறித்த குறுச்செய்தி வந்துள்ளது.
26/11 போன்று மும்பையில் தாக்குதலா? பாகிஸ்தான் தொலைபேசி எண்ணில் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தியால் பரபரப்பு
Published on

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். இதேபோல 700-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில், மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதை போலீசார் மீட்டபோது, அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.

படகை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப்பிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து "26/11 போன்ற" பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுச்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com