காரில் கருகிய நிலையில் தனியார் நிறுவன மேலாளர் சடலம்
பெங்களூருவில் காரில் கருகிய நிலையில் தனியார் நிறுவன மேலாளர் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி அருகே ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் காரில் எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக விஷ்வநாதபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், காரில் எரிந்து கருகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் எரிந்த நிலையில் இருந்தது எலகங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்த ஆரிப் பிரசா(வயது 39) என்பது தெரியவந்தது. அவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை காருடன் எரித்து கொலை செய்தனரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story