தொழிலாளி கொலை வழக்கில் தாய், சகோதரர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் தாய், சகோதரர் கைது
x

ராய்ச்சூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய், சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டி தங்க சுரங்க வேலைக்காக தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

ராய்ச்சூர்:

ராய்ச்சூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய், சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டி தங்க சுரங்க வேலைக்காக தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

தொழிலாளி கொலை

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா ஹட்டி டவுன் பகுதியை சேர்ந்தவர் சித்தண்ணா, தொழிலாளி. இவரது மனைவி ரங்கம்மா. இவர், தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி சித்தண்ணா தனது வீட்டில் பலத்த ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய தாய் யங்கம்மா, சகோதரர் குடதப்பா முயன்றனர். இதுபற்றி அறிந்த ரங்கம்மா அதிர்ச்சி அடைந்து கணவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது கணவரின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி ஹட்டி போலீஸ் நிலையத்தில் ரங்கம்மா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது குடிபோதையில் கீழே விழுந்து சித்தண்ணா இறந்து விட்டதாக யங்கம்மாவும், குடதப்பாவும் கூறினார்கள். ஆனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தாய், சகோதரர் கைது

இந்த நிலையில், சித்தண்ணா கொலை தொடர்பாக, அவரது தாய் யங்கம்மா, சகோதரர் குடதப்பாவை ஹட்டி டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், யங்கம்மாவின் கணவர் ஹட்டி தங்க சுரங்கத்தில் டி-குரூப் ஊழியராக வேலை பார்த்திருந்தார். அவர் மரணம் அடைந்ததால், யங்கம்மாவுக்கு வேலை கிடைத்தது. யங்கம்மாவுக்கு வயதாகி விட்டதால், அவர் ஓய்வு பெற உள்ளார். யங்கம்மா தனது வேலையை முதலில் மூத்த மகன் சித்தண்ணாவுக்கு கொடுப்பதாக கூறி இருந்தார். இதற்கு இளைய மகன் குடதப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் தனக்கு தான் வேலை வேண்டும் என்று யங்கம்மாவிடமும், குடதப்பாவுடனும் சித்தண்ணா தகராறு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த குடதப்பா தனது தாயுடன் சேர்ந்து சகோதரர் சித்தண்ணாவை கட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. கைதான தாய், மகன் மீது ஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story