மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்ற கணவர், மகன்


மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்ற கணவர், மகன்
x

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் மூதாட்டியை கட்டையால் அடித்து அவரது கணவரும், மகனும் சேர்ந்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கார்வார்:

உத்தர கன்னடா மாவட்டம் குமட்டா தாலுகா குஜஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வேஸ்வர்(வயது 69). இவரது மனைவி கீதா(64). இந்த தம்பதியின் மகன் மதுகர்(33). மதுகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் விஷ்வேஸ்வரும், மதுகரும் சேர்ந்து தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விஷ்வேஸ்வரும், மதுகரும் கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் மீண்டும் மதுகுடிக்க பணம் தரும்படி கீதாவிடம் 2 பேரும் கேட்டு உள்ளனர். ஆனால் பணம் கொடுக்க கீதா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஷ்வேஸ்வரும், மதுகரும் சேர்ந்து கீதாவை கட்டையால் சரமாரியாக அடித்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கீதா பரிதாபமாக இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுகரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஷ்வேஸ்வரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story