தேசிய பூங்காவில் இசை, இளம்பெண்ணுக்கு இணையாக நடனம் ஆடி அசத்திய யானை; வைரலான வீடியோ

உத்தரகாண்டில் உள்ள தேசிய பூங்காவில் இசை, இளம்பெண் நடனத்திற்கு இணையாக யானை ஒன்று நடனம் ஆடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
தேசிய பூங்காவில் இசை, இளம்பெண்ணுக்கு இணையாக நடனம் ஆடி அசத்திய யானை; வைரலான வீடியோ
Published on

டேராடூன்,

உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. இதில் வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவிற்கு பார்வையாளராக வைஷ்ணவி நாயக் என்பவர் சென்று உள்ளார். சமூக ஊடகங்களில் பரபரப்பாக உள்ள அவர், பல வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில், தேசிய பூங்காவில் நின்றிருந்த யானை முன்பு நின்று உடல் அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை அவர் ஆடினார். அவரது அசைவுக்கேற்ப, யானையும் தலையை ஆட்டியபடியும், நடனம் ஆடியும் அசத்தியது.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக்குகளை அளித்து உள்ளனர். வீடியோவில் பின்னணி இசையையும் ஓட விட்டு உள்ளார். அதனால், இசைக்கேற்ப நடனம் ஆடியது போன்று அமைந்திருந்தது வெகுவாக கவர்ந்திருந்தது.

எனினும் விமர்சன பகுதியில் ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் யானையை விலங்கு கொண்டு கட்டி வைத்துள்ள நிகழ்வை சுட்டி காட்டி, எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர்.

அது நடனம் ஆடவில்லை. நீண்ட காலம் தன்னை ஓரிடத்தில் கட்டி வைத்திருக்கும்போது இதுபோன்ற நடத்தையை அது வெளிக்காட்டுகிறது. அதன் உணர்வுகளை வைத்து விளையாடாதீர்கள் என்று ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அழகான வீடியோ. ஆனால் ஒரு வேண்டுகோள். விலங்குகளை துன்புறுத்தும் செயலை ஒரு மனிதராக ஆதரிக்காதீர்கள். ஏனெனில், யானை சவாரி மற்றும் குதிரை சவாரியின் பின்னால், அவற்றின் வேதனையான பின்னணி மறைந்து இருக்கும் என்றும் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com