பயங்கரவாதத்திற்கு பூஜ்ய சகிப்பின்மையை காட்ட வேண்டும்: ஐ.நா.வில் மத்திய மந்திரி ஜெய்சங்கர்


பயங்கரவாதம் மீது பூஜ்ய சகிப்பின்மையை உலக நாடுகள் காட்ட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.


புதுடெல்லி,


ஐ.நா.வின் 52-வது மனித உரிமைகள் கவுன்சிலுக்கான கூட்டத்தொடர் ஜெனீவா நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் மந்திரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

அவர்கள் தங்களுடைய நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை விசயங்களை பற்றி பேசி வருகிறார்கள்.

இந்த கூட்டத்தொடரில், மனித உரிமைகள் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகளில் தொழில் நுட்பங்களின் பயன்பாடு பற்றியும் விவாதிக்கப்படும்.

இந்த தொடரில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோ வழியே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, நாங்கள் மனித உரிமைகளை அதிகம் பாதிக்க கூடிய பிற சர்வதேச சவால்களை, குறிப்பிடும்படியாக பயங்கரவாத செயல்களை எதிர்கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

பயங்கரவாதம் மீது உலக நாடுகள் கட்டாயம் பூஜ்ய சகிப்பின்மையை வெளிப்படுத்த வேண்டும். இது ஒரு தீங்கு ஏற்படுத்த கூடிய மன்னிக்க முடியாத மனித உரிமை அத்துமீறலாகும். அதனை எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர் எப்போதும் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவர் என பேசியுள்ளார்.

1 More update

Next Story