மைசூருவில் தேசிய கிசான் சுவராஜ்ஜிய மாநாடு


மைசூருவில் தேசிய கிசான் சுவராஜ்ஜிய மாநாடு
x

மைசூருவில் தேசிய அளவில் கிசான் சுவராஜ்ஜிய மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

மைசூரு:

கிசான் சுவராஜ்ஜிய மாநாடு

மத்திய கிசான் சுவராஜ்ஜியத்தின் தேசிய அளவிலான மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதுதொடர்பாக மத்திய கிசான் சுவராஜ்ஜிய மாநாடு கமிட்டியின் தேசிய உறுப்பினர்கள் கபில்ஷா, ரவிக்குமார் மற்றும் அந்த மாநாட்டின் நல்வரவு கமிட்டி உறுப்பினரும், மைசூரு இளைய மன்னரான யதுவீர் ஆகியோர் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மைசூரு மன்னர் யதுவீர் கூறியதாவது:-

மைசூருவில் தேசிய அளவில் கிசான் கவராஜ்ஜிய மாநாடு நாளை தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மைசூரு திறந்தவெளி பல்கலைக்கழக அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டை, இயற்கை விவசாயத்தில் முன்மாதிரியாக திகழும் பாப்பம்மா என்பவர் தொடங்கி வைக்கிறார்.

இயற்கை விவசாயம்

இதில் இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும் சுற்றுச்சூழலை காப்பாற்றுவது, ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை உரம் பயன்படுத்தி விளைச்சல் செய்வது எப்படி என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் நாட்டில் 23 மாநிலங்களில் இருந்து 2000-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொள்கிறார்கள். இதில் பெண் விவசாயிகளும் அடங்குவர்.

இவர்களுடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் 3 நாட்களும் இயற்கை முறையில் விளைவித்த விளைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். மேலும் விவசாயம் தொடர்பான கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story