டெல்லியில் தொடங்கியது தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


டெல்லியில் தொடங்கியது தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 2:00 AM IST (Updated: 3 Jan 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம், டெல்லி கன்டோன்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

2023-ம் ஆண்டுக்கான தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம், டெல்லி கன்டோன்மென்டில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று தொடங்கியது. பிரதமர் பங்கேற்கும் பேரணியோடு வருகிற 28-ந் தேதி நிறைவடையும் இந்த ஒரு மாத கால முகாமில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 710 பெண்கள் உள்பட மொத்தம் 2155 பேர் பங்கேற்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் இருந்து 114 பேரும், வடகிழக்கு பகுதியில் இருந்து 120 பேரும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க விழாவில் தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் குருபீர்பால் சிங் பேசினார். இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி தத்துவம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். முகாமில் துணை ஜனாதிபதி, மத்திய பாதுகாப்பு மந்திரி, பாதுகாப்பு இணை மந்திரி, டெல்லி முதல்-மந்திரி, முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story