சித்தராமோற்சவா விழா தேவையா?; சி.டி.ரவி. எம்.எல்.ஏ. கண்டனம்


சித்தராமோற்சவா விழா தேவையா?; சி.டி.ரவி. எம்.எல்.ஏ. கண்டனம்
x

மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சித்தராமோற்சவா விழா தேவையா? என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி, சிக்கமகளூருவில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாவணகெரேவில் நடந்த சித்தராமோற்சவா விழாவில் காங்கிரசார் ஒற்றுமையாக இருப்பதாக கூறியுள்ளனர். இந்த ஒற்றுமை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?.

இதேபோல் தான் ஒற்றுமையாக ஒரு விழா நடத்தினார்கள். ஆனால் கடைசியில் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.பரமேஸ்வரைேய ஒதுக்கிவிட்டார்கள். இந்த நிலை வருங்காலத்திலும் நடக்கும். சித்தராமையா தனது ஆட்சி காலத்தில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து 2,500 வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

ஆனால் தற்போது பா.ஜனதா கட்சி, அந்த அமைப்பினரை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். சித்தராமையா ஆட்சியில் தான் மதக்கலவரம் ஆரம்பித்தது.

உதவி இருக்கலாம்

மாநிலத்தில் மழைக்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் வரை இறந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் சித்தராமோற்சவா விழா தேவையா?. இதனை கொண்டாடுவதற்கு பதிலாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்கலாம்.

இது துக்க வீட்டில், விழா நடத்தியது போல் உள்ளது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பா.ஜனதா சார்பில் பிரமாண்டமாக நடக்க இருந்த நிகழ்ச்சிகள் கூட பிரவீன் நெட்டார் கொலை உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story