நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நிறைவு: 18.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக தகவல்


நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நிறைவு: 18.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாக தகவல்
x
தினத்தந்தி 17 July 2022 5:54 PM IST (Updated: 17 July 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது.

புதுடெல்லி,

புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்தநிலையில், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், ஆயுஷ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர். தமிழ், இந்தி, உள்பட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதினர்.

தமிழகம் முழுவதும் 1.42 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி உள்ளனர். தமிழ் மொழியில் 31,803 பேர் உள்பட தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு தமிழ் மொழியில் 60 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதி உள்ளனர்.


Related Tags :
Next Story