'நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல' - ராகுல் காந்தி


நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல - ராகுல் காந்தி
x

நேரு தனது பணிகளால் அறியப்படுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி டீன் மூர்த்தி வளாகத்தில் 'நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' அமைந்துள்ளது. இதன் பெயர் 'பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க 2 நாள் பயணமாக இமாச்சல பிரதேசம் செல்வற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியிடம், 'நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, 'நேரு அவரது பணிகளால் அறியப்படுகிறார், பெயரால் அல்ல' என்று பதிலளித்தார்.

1 More update

Next Story