புதுடெல்லி: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்..!


புதுடெல்லி: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்..!
x

புதுடெல்லியில் தொழிற்சாலையின் மேலாளர் ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வாயில் ஆசிட் ஊற்றியுள்ளான்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் செருப்பு தொழிற்சாலை ஒன்றின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெய் பிரகாஷ் (31). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, உதவிக்காக அதே தொழிற்சாலையில் பணிபுரியும் 15 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர் சிறுமியை தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து சில நாட்ககளுக்குப் பிறகு, சிறுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சிறுமியை நிறுத்திய பிரகாஷ், அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றியுள்ளான்.

இதனால், சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர், நடந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், இந்த கொடூர செயலை செய்த பிரகாஷை கைது செய்தனர்.

பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில் கற்பழிப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை ஆணையம் கேட்டுள்ளது.

"15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய முயன்றதாக எங்களுக்கு முக்கிய புகார் வந்துள்ளது. சிறுமியை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. எங்கள் குழு தொடர்ந்து சிறுமியின் நிலையைக் கண்காணித்து சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்திற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. என்று சுவாதி மலிவால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story