காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொடக்கம்: மத்திய மந்திரி அமித்ஷா


காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொடக்கம்:  மத்திய மந்திரி அமித்ஷா
x

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் 35 ஆயிரம் போலீசார் உயிரிழந்து உள்ளனர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.



போபால்,



மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் 35 ஆயிரம் போலீசார் உயிரிழந்து உள்ளனர்.

அதனாலேயே நாடு பாதுகாப்புடன் உள்ளது. நக்சல்வாதம் ஒழிக்கப்பட்டு உள்ளது. பிற நாடுகள் முயன்றபோதும், பயங்கரவாதம் கொடூர வடிவில் நம்முன் நிற்க முடியவில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பேசியுள்ளார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் மற்றும் காமக்யா முதல் துவாரகா வரை போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடவில்லை என்றால் இவையெல்லாம் சாத்தியமில்லை என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட சிமி பயங்கரவாத இயக்கத்தினரின் நடவடிக்கைகளை பா.ஜ.க. வேருடன் அழித்து விட்டது. பணியின்போது உயிரிழக்கும் போலீசாரின் எண்ணிக்கையானது, ராணுவ வீரர்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகம் என அவர் கூறியுள்ளார்.


Next Story