ஹாவேரி, யாதகிரியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடம் விரைவில் தொடக்கம்- மந்திரி சுதாகர் பேட்டி


ஹாவேரி, யாதகிரியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடம் விரைவில் தொடக்கம்- மந்திரி சுதாகர் பேட்டி
x

ஹாவேரி, யாதகிரியில் புதிய மருத்துவ கல்லூரி கட்டிடம் விரைவில் தொடக்கம் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-ஹாவேரி, யாதகிரி, சிக்கமகளூருவில் மருத்துவ கல்லூரிகள் தொடக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள வாஜ்பாய் மருத்துவ கல்லூரியை எடியூரப்பா ஏற்கனவே தொடங்கி வைத்தார். கடந்த 2 மாதங்களாக மழை பெய்ததால் கட்டிட பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றுவிட்டதால் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்தும்படி ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டால் அந்த மாவட்ட மக்களுக்கு நல்ல தரமான மருத்துவ சேவை கிடைக்கும். தாவணகெரே, விஜயாப்புரா, உடுப்பி, பெங்களூரு புறநகர் மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டப்படும். ராமநகரில் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கட்டிட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். மாநிலத்தில் 9 மாவட்டங்களில் அரசு-தனியார் பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு பா.ஜனதாவில் புதிய பதவி வழங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜனதாவில் யார் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பதை எங்கள் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுபற்றி காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் கருத்து கூற தேவை இல்லை.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story