சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக காஷ்மீர் சென்றார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 March 2024 1:36 PM IST (Updated: 7 March 2024 2:49 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார். விமானம் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

1 More update

Next Story