டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த அமைப்பு இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விமர்சனம்


டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த அமைப்பு இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விமர்சனம்
x

டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த சட்ட ரீதியான அமைப்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விமர்சித்துள்ளார்.

ராஞ்சி,

டிஜிட்டல் ஊடகங்கள் பொறுப்பாக இயங்க சட்ட ரீதியான அமைப்புகள் இல்லாததால் அவை பொறுப்பின்றி நடந்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.

தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழகத்தின் சார்பில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 'ஒரு நீதிபதியின் வாழ்வு' என்ற தலைப்பில் நீதிபதி எஸ்.பி.சின்ஹா நினைவு நிகழ்வு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அச்சு ஊடகங்கள் பொறுப்பாக இயங்க சட்ட ரீதியாக முறைப்படுத்த சில அமைப்புகள் உள்ளன என்றார். ஆனால் டிஜிட்டல் ஊடகங்களுக்கு அதுபோன்ற அமைப்புகள் இல்லாததால் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story