மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதம் தொடக்கம்...!


மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதம் தொடக்கம்...!
x

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

டெல்லி,

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியுள்ளது. அமளி காரணமாக 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட மக்களவை தற்போது மீண்டும் கூடியது.

அவை கூடிய உடன் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அந்த கேள்விகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட முக்கிய மந்திரிகள் பதில் அளிக்க உள்ளனர். ஆனால், இந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

இதனால், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க வேண்டுமென கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.


Next Story