சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்த பண அளவு குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை - நிர்மலா சீதாராமன்


சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு செய்த பண அளவு குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை - நிர்மலா சீதாராமன்
x

Image Courtesy : PTI 

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்த பணம் குறித்த கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

புதுடெல்லி,

இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்த பணத்தின் சரியான அளவு குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்த பணம் குறித்த கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், "இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி உயர்ந்துள்ளதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் முதலீடு செய்ததாகக் கூறப்படும் பணம், கறுப்புப் பணம் என்று குறிப்பிடப்படவில்லை . கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


Next Story