மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்


மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
x

மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பகவத் கரத் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று கூறி உள்ளார். மேலும் அவர் கூறி இருப்பதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடிந்தது. இந்தத் தொகை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்தது.

ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டு வரும் முடிவினைத் தெரிவித்துள்ளன. பஞ்சாப் அரசும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் ஓய்வூதியத் தொகை ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ), சட்டப்படி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (என்.பி.எஸ்.) மாநில அரசுகளும், ஊழியர்களும் அளித்த பங்களிப்பை மாநில அரசுகளிடம் திரும்பத்தர சட்டப்படி இயலாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story