கர்நாடகாவில் முஸ்லிம் பெண்களுக்கு தனி கல்லூரிகள் அமைக்கப்படுகிறதா? பசவராஜ் பொம்மை விளக்கம்


கர்நாடகாவில் முஸ்லிம் பெண்களுக்கு தனி கல்லூரிகள் அமைக்கப்படுகிறதா? பசவராஜ் பொம்மை விளக்கம்
x

(Photo | PTI)

கர்நாடக வக்பு வாரிய தலைவர், முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக வக்பு வாரிய தலைவர், முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அவ்வாறு முஸ்லிம் பெண்களுக்கு என்று தனியாக 10 கல்லூரிகளை திறக்கும் திட்டம் இல்லை. ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு கல்வி நிலையங்களுக்கு வரும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சொல்வது உண்மைக்கு மாறானது.

முஸ்லிம் மாணவிகளின் வருகை எப்போதும் போல் தான் உள்ளது. கர்நாடகத்தில் படிப்பறிவு அதிகரித்துள்ளது. சிறுபான்மையின பெண் குழந்தைகள் ஆர்வத்துடன் கல்வி கற்கிறார்கள். இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை.இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story