டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த தனிச்சட்டமா? மத்திய அரசு விளக்கம்


டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த தனிச்சட்டமா? மத்திய அரசு விளக்கம்
x

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்த தனி சட்டம் இயற்றும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்கு முறைப்படுத்த தனி சட்டம் இயற்றும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"2000-ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைக் கொண்டுவந்ததுள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள் இந்த விதிமுறைகளின் படி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் ஊடகங்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.


Next Story