நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண்


நுழைவாயில் கதவை திறக்க தாமதம்; காவலாளியை தாக்கிய பெண்
x

நுழைவாயில் கதவை திறக்க தாமதமானதால் காவலாளியை காரில் வந்த பெண் கடுமையாக தாக்கினார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் ஜேபி விஸ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம்பெண் தனது காரில் வந்துள்ளார்.

அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பெண் காரை விட்டு இறங்கி அங்கு பணியில் இருந்த காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவலாளிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவர்களை தாக்கியுள்ளார். பின்னர், 'பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்' என கூறிய அப்பெண் பீகாரி சமூகம் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்துள்ளார்.

காவலாளியை பெண் தாக்குவதும் , அவதூறாக பேசும் வீடியோவாகும் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து காவலாளிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்து, தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.



1 More update

Next Story