கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை: கை விரித்த சித்தராமையா


கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை: கை விரித்த சித்தராமையா
x

கோப்பு படம் (பிடிஐ)

தினத்தந்தி 12 Aug 2023 6:38 AM GMT (Updated: 12 Aug 2023 6:46 AM GMT)

காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு முறையிட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விட மறுத்து கர்நாடக அரசு அடம் பிடித்து வருகிறது. எனினும், தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டு்ம் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, "போதிய மழை பெய்யாததால் தண்ணீரை திறக்க முடியவில்லை. கேரளா மற்றும் குடகு மாவட்டத்தில் மிகக் குறைவான அளவே மழை பெய்துள்ளது. மிகக்குறைவான அளவு மழை பெய்துள்ளதால் கர்நாடகாவில் போதிய அளவு தண்ணீர் இல்லை" என்றார்.


Next Story